மாவட்ட செய்திகள்

கடலூரில் மழைநீர் கால்வாய்க்குள் கவிழ்ந்த லாரி கார் சேதம் + "||" + Damage to lorry car overturned in rainwater canal in Cuddalore

கடலூரில் மழைநீர் கால்வாய்க்குள் கவிழ்ந்த லாரி கார் சேதம்

கடலூரில் மழைநீர் கால்வாய்க்குள் கவிழ்ந்த லாரி கார் சேதம்
கடலூர் கண்ணாரப்பேட்டையில் இருந்து செம்மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வண்ணாரப்பாளையம் நோக்கி புறப்பட்டு சென்றது.
கடலூர்,

கடலூர் கண்ணாரப்பேட்டையில் இருந்து செம்மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வண்ணாரப்பாளையம் நோக்கி புறப்பட்டு சென்றது. அந்த லாரி சில்வர் பீச் ரோடு கடலூர் சரவணபவ கூட்டுறவு அங்காடி அருகே வந்த போது, அதன் டிரைவர் சாலையோரம் லாரியை நிறுத்தினார். அப்போது சாலையோரம் இருந்த கால்வாயில் போடப்பட்ட சிமெண்டு சிலாப் உடைந்து விழுந்தது. இதில் லாரி ஒரு புறம் கவிழ்ந்தது. அப்போது அதன் அருகில் நின்ற காரின் மீது டிப்பர் சாய்ந்து விழுந்தது. இதனால் காரின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது. இருப்பினும் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திட்டக்குடி அருகே கோர விபத்து: பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்தது; தாய், மகன் உள்பட 3 பேர் பலி
தி்ட்டக்குடி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.
2. விருத்தாசலம் மணிமுக்தாற்றி்ல் வெள்ளப்பெருக்கு: 150 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்மழை பெய்தது.
3. சின்னசேலம் அருகே மழைநீ்ரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்
சின்னசேலம் அருகே மழைநீ்ரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.
4. பெட்ரோல் ஊற்றி மளிகை கடையை எரித்த வாலிபர் கைது ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
திருச்சி அரியமங்கலத்தில் பெட்ரோலை ஊற்றி மளிகை கடையை எரித்தவாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே கடற்படை அதிகாரியின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்டிரல் ரெயில் நிலையம் எதிரே ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.