மாவட்ட செய்திகள்

விருத்தாசலம் மணிமுக்தாற்றி்ல் வெள்ளப்பெருக்கு: 150 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் + "||" + Vriddhachalam Manimuktar flood: Damage to 150 acres of paddy fields

விருத்தாசலம் மணிமுக்தாற்றி்ல் வெள்ளப்பெருக்கு: 150 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

விருத்தாசலம் மணிமுக்தாற்றி்ல் வெள்ளப்பெருக்கு: 150 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்மழை பெய்தது.
விருத்தாசலம்,

கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்மழை பெய்தது. இதன் காரணமாக கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விருத்தாசலம் அருகே மணிமுக்தா ஆற்றங்கரையோரம் உள்ள சொட்டவனம் கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தன. மேலும் சாய்ந்த நெற்கதிர்களில் இருந்த நெல்மணிகள் முளைத்து வீணாக தொடங்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் கூறுகையில், சொட்டவனம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளோம். ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்து, பராமரித்து வந்த நிலையில் தொடர்மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. எனவே அரசு மாவட்ட நிர்வாகம் மூலம் சேதமடைந்த பயிர்களை சரியானமுறையில் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அழுகிய நெற்பயிர்களுடன் வந்த பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர்.
2. திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை: அறுவடைக்கு தயாரான 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
3. கடலூரில் மழைநீர் கால்வாய்க்குள் கவிழ்ந்த லாரி கார் சேதம்
கடலூர் கண்ணாரப்பேட்டையில் இருந்து செம்மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வண்ணாரப்பாளையம் நோக்கி புறப்பட்டு சென்றது.
4. சின்னசேலம் அருகே மழைநீ்ரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்
சின்னசேலம் அருகே மழைநீ்ரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.
5. பெட்ரோல் ஊற்றி மளிகை கடையை எரித்த வாலிபர் கைது ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
திருச்சி அரியமங்கலத்தில் பெட்ரோலை ஊற்றி மளிகை கடையை எரித்தவாலிபர் கைது செய்யப்பட்டார்.