பிப்ரவரி 2-ந் தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்


பிப்ரவரி 2-ந் தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2021 5:57 AM GMT (Updated: 11 Jan 2021 5:57 AM GMT)

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் 2-ந் தேதி முதல் மறியல்- சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. இதில் சங்க பொதுச்செயலாளர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு, மாநில பொருளாளர் பாஸ்கர், மாநில துணை த்தலைவர், பழனியம்மாள், மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:- சத்துணவு அமைப்பாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு காலிபணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும்.

சிறை நிரப்பும் போராட்டம்

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் மீது மேற்கொள்ளப்பட்டு உள்ள தற்காலிக பணிநீக்க நடவடிக்கையை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ந்் தேதி மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாட்டை மதுரையில் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2-ந்் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியலில் ஈடுபட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story