பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய ரூ.1½ லட்சம் குட்கா பறிமுதல் டிரைவர் கைது + "||" + Gutka driver arrested for smuggling Rs 10 lakh from Bangalore to Chennai
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய ரூ.1½ லட்சம் குட்கா பறிமுதல் டிரைவர் கைது
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி வந்த ரூ.1½ லட்சம் குட்காவை கந்திகுப்பம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் போலீசார் நேற்று காலை கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலிநாயனப்பள்ளி கூட்டு ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் 38 சிறிய அட்டை பெட்டிகளில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா ஆகியவை இருப்பது தெரியவந்தது. டிரைவரிடம் நடத்திய விசாரணையில் குட்கா பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
டிரைவர் கைது
இதையடுத்து குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கார் டிரைவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து டிரைவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
14 வயதுடைய சிறுமியை 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்து தப்பிய வழக்கில், துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வந்த போது பிடிபட்டார்.