மாவட்ட செய்திகள்

பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி + "||" + Worker killed by electric shock near Paramathivelur

பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஒடுவங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் விக்னேஸ்வரன் (வயது 31). கூலித்தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அதே பகுதியை சேர்ந்த 13 பேருடன் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர், தண்ணீர்பந்தல் பகுதிகளில் உள்ள பழனிசாமி என்பவரது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு பிடுங்குவதற்காக சென்றனர்.


‌அப்போது மரவள்ளிக்கிழங்குகளை பிடுங்கிய உடன் அங்குள்ள கிணற்றில் 11 பேர் குளித்தனர். விக்னேஸ்வரன் மற்றும் 2 பேர் மட்டும் கிணற்றின் மேலே உள்ள தொட்டியில் குளிக்கச் சென்றனர். தொட்டியில் குளிப்பதற்காக மின்மோட்டாரை போடுவதற்காக விக்னேஸ்வரன் சென்றார்.

விசாரணை

அந்தசமயம் எதிர்பாராதவிதமாக மின்சாரம் அவரை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த வினேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற பரமத்திவேலூர் போலீசார் விக்னேஸ்வரனின்‌ உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. இந்த சம்பவம் குறித்து இறந்து போன விக்னேஸ்வரனின் அண்ணன் தெய்வசிகாமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நீச்சல் பழகியபோது விபரீதம்: குளத்தில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் பலி
சாணார்பட்டி அருகே, நீச்சல் பழகியபோது குளத்தில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
2. உத்திரமேரூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலி
உத்திரமேரூர் அருகே வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
3. பரப்பாடி அருகே குளத்தில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலி
பரப்பாடி அருகே குளத்தில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
4. கார் மோதியதில் கல்லூரி மாணவர் பலி
பென்னாகரம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.
5. வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து குழந்தை பலி அக்காள், தம்பி உள்பட 3 பேர் படுகாயம்
வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து குழந்தை பலியானது. அக்காள், தம்பி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.