பொங்கல் பண்டிகையையொட்டி தென்மாவட்ட மக்கள் செல்ல வசதியாக கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம் + "||" + Temporary bus stand in Klambakkam for the convenience of the people of the Southern District during the Pongal festival
பொங்கல் பண்டிகையையொட்டி தென்மாவட்ட மக்கள் செல்ல வசதியாக கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம்
பொங்கல் பண்டிகையையொட்டி தென்மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பஸ் நிலையம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையோரம் உள்ள சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் புதியதாக புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது அந்த இடத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
400 போலீசார் பாதுகாப்பு
இங்கு ஆம்னி பஸ்களும் நின்று செல்லும். தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்ட இடத்தில் மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வசதி, கழிப்பறை மற்றும் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
மேலும் தற்காலிகமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து மகேந்திரா சிட்டி வரை ஜி.எஸ்.டி.சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சத்து 6 ஆயிரத்து 721 பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.5 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.