திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; 819 பேருக்கு பணி நியமன ஆணை; அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்


திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; 819 பேருக்கு பணி நியமன ஆணை; அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்
x
தினத்தந்தி 11 Jan 2021 11:38 PM GMT (Updated: 11 Jan 2021 11:38 PM GMT)

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை மற்றும் பயிற்சி துறை வாயிலாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ.வீரராகவ ராவ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

முகாமில் 7,425 பேர் பங்கேற்றனர். பல்வேறு துறைகளை சேர்ந்த 153 நிறுவனங்கள் பங்கேற்று 1,065 பேரை தேர்வு செய்தனர். அதில் 819 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார். மேலும் 246 பேர் 2-ம் கட்ட நேர்முகத்தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர். இதில் 77 பேர் மாற்றுத்திறனாளிகள்.

முகாமில் ஜெயா கல்வி குழுமங்களின் தலைவர் அ.கனகராஜ், அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர், வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் மீனாட்சி, உதவி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story