மாவட்ட செய்திகள்

அன்னவாசல் அருகே மாநில அளவிலான கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு + "||" + Prizes for the teams that won the state level kabaddi competition near Annavasal

அன்னவாசல் அருகே மாநில அளவிலான கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

அன்னவாசல் அருகே மாநில அளவிலான கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
அன்னவாசல் அருகே மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் அய்யனார் கோவில் திடலில் மின்னொளி கபடி போட்டி கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றன. இதில் திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.


பரிசு

போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடந்தது. இதில் முதல் பரிசை திருச்சி காவல்துறை அணியும், 2-வது பரிசை திருநெல்வேலி துர்க்காம்பிகை அணியும், 3-வது பரிசை கொடும்பாலூர் மூவர் ஐவர் அணியும், 4-வது பரிசை பெருமநாடு இணைந்தகைகள் அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு, கோப்பைகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

கபடி போட்டியை காண புதுக்கோட்டை மாவட்ட சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் வந்திருந்து கண்டுகளித்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டி - சரத்குமார் அறிவிப்பு
சமத்துவ மக்கள் கட்சிக்கு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதேவேளை சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட இருக்கிறோம் என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.
2. தேனியில் முதல் முறையாக ஜல்லிக்கட்டை போல நடந்த பன்றி பிடிக்கும் வினோத போட்டி
தேனியில் ஜல்லிக்கட்டு போன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பன்றி பிடிக்கும் வினோத போட்டி நடந்தது.
3. ஒட்டன்சத்திரத்தில் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி
ஒட்டன்சத்திரம் சத்யா நகரில் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது.
4. திருக்கோவிலூர் அருகே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
திருக்கோவிலூர் அருகே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்.
5. கோலியனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி அமைச்சர் தொடங்கி வைத்தார்
கோலியனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.