பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார் பொங்கல் விழாவில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேச்சு


பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார் பொங்கல் விழாவில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2021 1:17 AM GMT (Updated: 12 Jan 2021 1:17 AM GMT)

பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார் என வேலாயுதம்பாளையத்தில் நடந்த பொங்கல் விழாவில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறினார்.

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழா ெகாண்டாட்டது. இதில் 750 பெண்கள் கலந்து கொண்டு ஒன்றாக பொங்கல் வைத்தனர். தொடர்ந்து பொங்கல் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி, மாநிலத்துணைத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒரு மாட்டுவண்டியில் ஒன்றாக மேடைக்கு வந்து கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு கரூர் மாவட்ட தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் சிவசுப்பிரமணி முன்னிலை வகித்தார்.

மோடி நம்பிக்கை வைத்துள்ளார்

கூட்டத்தில், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி கன்னட மொழியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-, (இதனை அண்ணாமலை மொழி பெயர்ப்பு செய்தார்), உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். சிலம்பாட்டம், பரதநாட்டியம் தமிழ் பாரம்பரித்துடன் பொங்கல் விழா நடந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். தமிழகத்தில் உள்ள மக்கள், பெண்களை யார் அவமானப் படுத்துகிறார்களோ அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளீர்கள். தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பேக் ஆப் மோடி என்று சொல்லுகிறார்கள். இதை ராஜீவ்காந்திக்கு கொடுக்கவில்லை, பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். கியாஸ் சிலிண்டர், வீடுகட்டி தரும் திட்டம் என்று நல்ல திட்டங்கள் வழங்கி உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

2 தொகுதியில் வெற்றி நிச்சயம்

பா.ஜ.க. மாநில துைணத்தலைவர் அண்ணாமலை பேசுகையில், நம்ம ஊர் பொங்கல் விழா மாவட்டம், தலைநகர் பகுதிகளில் நடப்பது வழக்கம். இந்த விழாவை வேலாயுதம் பாளையத்தில் நடத்துவது இவ்வூருக்கு பெருமை, புகழ் கிடைக்கிறது. பா.ஜ.க. கரூர் மாவட்டத்தில் ஒரு இடம் மட்டும் தான் என்பதில் இல்லை. இரண்டு தொகுதியில் வெற்றி பெறுவது நிச்சயம் என்றார்.

இதில், பா.ஜ.க. மாநில மகளிர் அணி துணைத்தலைவி மீனாவினோத்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story