விஜயகாந்த் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் தே.மு.தி.க.வினருக்கு விஜயபிரபாகரன் அறிவுரை


விஜயகாந்த் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் தே.மு.தி.க.வினருக்கு விஜயபிரபாகரன் அறிவுரை
x
தினத்தந்தி 12 Jan 2021 2:13 AM GMT (Updated: 12 Jan 2021 2:13 AM GMT)

விஜயகாந்த் வார்தைக்கு கட்டுப்பாட்டு ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தே.மு.தி.க.வினருக்கு விஜயபிரபாகன் அறிவுரை கூறினார்.

துறையூர்,

வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தே.மு.தி.க. நிறுவனத்தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் துறையூருக்கு வந்திருந்தார். அவருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கும்ப மரியாதையுன் வரவேற்பு அளித்தனர். பின்னர் துறையூர் முசிறி ரவுண்டானாவில் இருந்து திருச்சி சாலை வழியாக பஸ் நிலையத்தை அடைந்த அவர், பின்பு பாலக்கரையில் அமைக்கப்பட்டு இருந்த திடலில் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கிப் பேசினார். கூட்டத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் குமார் தலைமை தாங்கினார். துறையூர் நகர செயலாளர் துரை சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் ரா.சங்கர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் காவேரி கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், விஜய பிரபாகரன் பேசுகையில், நாம் அனைவரும் விஜயகாந்த் கூறும் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும். தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும் என்றாலும்கூட நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

பொங்கல் பரிசு

இதேபோல தா.பேட்டையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு தே.மு.தி.க. வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் விஜயபிரபாகரன் பங்கேற்று கட்சி கொடியேற்றி புதிய கல்வெட்டை திறந்து வைத்து 500 பேருக்கு பச்சைஅரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, மஞ்சள் கொத்து உள்ளிட்டவைகள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி பேசினார்.

Next Story