கொரோனா தடுப்பூசி பணியை வெற்றிகரமாக நடத்த வேண்டும்; அதிகாரிகளுக்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவு


மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
x
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
தினத்தந்தி 12 Jan 2021 2:30 AM GMT (Updated: 12 Jan 2021 2:30 AM GMT)

கொரோனா தடுப்பூசி பணியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து
ஜனவரி 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நேற்று அவர் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

மராட்டியத்தில் மும்பை ஜூகு பகுதியில் உள்ள கூப்பர் ஆஸ்பத்திரி, ஜல்னா அரசு ஆஸ்பத்திரியில் வருகிற 16-ந் தேதி பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினமே மாநிலத்தில் 511 இடங்களில் (மும்பையில் 8 இடங்கள் உள்பட) கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

இதற்காக 8 லட்சம் சுகாதாரப்பணியாளர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். மும்பையில் மட்டும் 1.3 லட்சம் பேர் முன்பதிவு செய்து இருக்கின்றனர்.

வெற்றிகரமாக நடத்த உத்தரவு

இந்தநிலையில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணியை வெற்றிகரமாக முடிக்க அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் வழிகாட்டுதலின் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என முதல்-மந்திரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் திட்டம் குறித்து நேற்று பிரதமர் மோடி முதல்-மந்திரியிடம் தெரிவித்தார். அதன்பிறகு தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடர்பாக முதல்-மந்திரி சுகாதாரத்துறை அதிகாரிகள், செயல்திட்ட குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் முதல்-மந்திரி தடுப்பு மருந்து இருப்பு, போக்குவரத்து மற்றும் சேமிப்பு வசதி குறித்து ஆய்வு செய்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story