ஒரு மாத சம்பளத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்


ஒரு மாத சம்பளத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Jan 2021 3:16 AM GMT (Updated: 12 Jan 2021 3:16 AM GMT)

ஒரு மாத சம்பளத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் என சத்துணவு ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

சிக்கல்,

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய மாநாடு நடைபெற்றது. ஒன்றிய தலைவர் அருளேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட செயலாளர் அன்பழகன் மாநாட்டினை தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தேன்மொழி, செயலாளர் ராஜீ ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பொங்கல் போனஸ்

சத்துணவு திட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை, முழு நேர அரசு ஊழியர்களாக அறிவித்து, ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறுகின்ற சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு மாதம் ரூ.9,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில துணை தலைவர் பாண்டி, மாவட்ட துணை தலைவர் புகழேந்தி, இணை செயலாளர் பாலாம்பாள், ஒன்றிய செயலாளர் முருகையன், பொருளாளர் மரிய பிரகாசம் உள்பட அனைத்து ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட மகளிரணி நிர்வாகி லல்லி நன்றி கூறினார்.

Next Story