மாவட்ட செய்திகள்

விதவை பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Mather's union protests demanding harsher punishment for those who raped a widow

விதவை பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விதவை பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விதவை பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி நாகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,

நாகை அவுரி திடலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் எழிலரசி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுஜாதா, மாவட்ட செயலாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சுபா தேவி கலந்து கொண்டு பேசினார். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.


நாகையில் விதவை பெண்ணை கோவிலுக்குள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நிவாரணம்

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கி, உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெண்களை தொடர்ந்து இழிவுப்படுத்தியும், முதல்-அமைச்சரை அவதூறாகவும் பேசி வருவதாக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூர் அருகே உள்ள தேனீர்பட்டி பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் சம்பா ஒரு போக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
3. விழுப்புரத்தில் கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. தி.மு.க.வை கண்டித்து சிதம்பரம், விருத்தாசலத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தி.மு.க.வை கண்டித்து சிதம்பரம், விருத்தாசலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.