மாவட்ட செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் மாணவ, மாணவிகள் போராட்டம் + "||" + Students protest in pouring rain in front of Tanjore Collector's Office

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் மாணவ, மாணவிகள் போராட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் மாணவ, மாணவிகள் போராட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் மாணவ, மாணவிகள் போராட்டம் விலையில்லா மடிக்கணினி வழங்க வலியுறுத்தி கோ‌‌ஷம்.
தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் வந்தனர். அப்போது மழை கொட்டியது. கொட்டும்மழையில் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைத்தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.அப்போது அவர்கள் 2017-2018-ம் கல்வி ஆண்டில் படித்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும். கொரோனாவால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை மாணவர் நலன் கருதி, உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.இந்த போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வீரையன், மாநகர செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலத்துக்கு சென்று இது தொடர்பான கோரிக்கை மனுவினை கலெக்டர் கோவிந்தராவிடம் அளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தர்ணா போராட்டம்
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி திருவாரூரில் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
2. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதை தடுத்த போலீசாருடன் தள்ளுமுள்ளு செய்தனர்.
3. மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டுங்காவில் பா.ஜனதாவினர் போராட்டம்
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாட்டுங்காவில் பா.ஜனதாவினர் போராட்டம் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
4. 43-வது நாளாக மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சிதம்பரம் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை
43-வது நாளாக நேற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிதம்பரம் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? - நாளை மீண்டும் பேச்சுவார்த்தை
3 வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைக்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இதனால் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.