பணி நிரந்தரம் செய்யக்கோரி கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு செவிலியர்கள் உண்ணாவிரதம் + "||" + Nurses fast as umbrellas in pouring rain demanding permanent work
பணி நிரந்தரம் செய்யக்கோரி கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு செவிலியர்கள் உண்ணாவிரதம்
தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில தலைவி கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கெமியா, செல்வி, சகுந்தலா, சிவகாமி, சிவபிரசாத், பிரசன்னபிரியா, பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த ஒப்பந்த செவிலியர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை முதலே தஞ்சையில் மழை பெய்ததால் போராட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்கள் குடைபிடித்தவாறு பங்கேற்றனர். போராட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மருத்துவப்பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், ஒப்பந்த முறைப்படி 15 ஆயிரம் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு, அனைவரும் 2 ஆண்டில் காலமுறை ஊதியத்தில் நிரந்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 6 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை 2,300 பேர் மட்டுமே காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். எனவே நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக அரசு மருத்துவமனையில் மிக சொற்ப தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றி சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த செவிலியர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
ஈரோடு திருநகர் காலனியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழர் கழகத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடையை திறக்கக்கோரி மது பிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.