மாவட்ட செய்திகள்

வெள்ளிச்சந்தை அருகே கணவனுக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு பெண் தீக்குளித்து தற்கொலை + "||" + Woman commits suicide by setting fire to her husband near Silver Market

வெள்ளிச்சந்தை அருகே கணவனுக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு பெண் தீக்குளித்து தற்கொலை

வெள்ளிச்சந்தை அருகே கணவனுக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு பெண் தீக்குளித்து தற்கொலை
வெள்ளிச்சந்தை அருகே கணவனுக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜாக்கமங்கலம்,

வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் மரிய டேவிட் விக்டர், கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி மேரி குளோரிபாய் (வயது 41). இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. ேமரி குளோரிபாய் கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால், அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.


கடந்த 9-ந் தேதி மரிய டேவிட் விக்டர் நெல்லை மாவட்டத்திற்கு வேலைக்கு சென்றிருந்தார். மகள்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.

தற்கொலை

வீட்டில் தனியாக இருந்த மேரி குளோரிபாய் கணவனை செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்யப்போகிறேன் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதனால் பதைபதைத்து போன மரிய டேவிட் விக்டர் ஊரில் உள்ள உறவினர்களை தொடர்பு கொண்டு தனது வீட்டில் சென்று பார்க்கும் படி கூறினார். அவர்கள் அங்கு சென்று பார்த்த போது மேரி குளோரிபாய் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு மேரி குளோரிபாய் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கரூரில் கருத்து வேறுபாடு காரணமாக புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. பள்ளிக்கூடம் திறப்பால் அச்சம்: ஈரோட்டில் தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவன் தற்கொலை
பள்ளிக்கூடம் திறப்பால் அச்சம் அடைந்து ஈரோட்டை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. சின்னசேலம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை சத்தியம் செய்த கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் விரக்தி
சின்னசேலம் அருகே மது குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்த கணவர் மீண்டும் மது குடித்து விட்டு வந்ததால் மனமுடைந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. பொத்தேரியில் தனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியை தற்கொலை தூக்கில் பிணமாக தொங்கினார்
பொத்தேரியில் தனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
5. பொத்தேரியில் தனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியை தற்கொலை தூக்கில் பிணமாக தொங்கினார்
பொத்தேரியில் தனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியை தற்கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை