மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் மது அருந்தக்கூடாது; புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல் + "||" + Corona vaccinators should not drink alcohol; Puducherry Health Department Director Instruction

கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் மது அருந்தக்கூடாது; புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்

கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் மது அருந்தக்கூடாது; புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்
கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் 28 நாட்கள் மது அருந்தக்கூடாது என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் எச்சரிக்கை விடுத்தார்.
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமே‌‌ஷ் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி போட புதுவை அரசு தயார் நிலையில் உள்ளது. தடுப்பூசி மருந்துகள் இருப்பு வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவது தொடர்பாக 2 முறை ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.

அடுத்ததாக பிற முன்கள பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு கீழ் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். முதல்கட்டமாக 13 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளனர். அதாவது 7 ஆயிரம் தனியார் ஊழியர்களும், 6 ஆயிரம் அரசு ஊழியர்களும் இதில் அடங்கும்.

மது அருந்தக்கூடாது
இதற்காக 145 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தொடர்ந்து 30 நிமிடம் டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள். அவர்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாவிட்டால் மட்டுமே வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

கொரோனா தடுப்பூசி 2 முறை போடப்பட வேண்டும். அதாவது முதல் ஊசிபோட்ட 28-வது நாள் அடுத்த ஊசி போடப்பட வேண்டும். 2-வது ஊசி போட்டுக்கொண்டால்தான் எதிர்ப்பு சக்தி வரும். முதல் தடுப்பூசி போட்ட பின் அடுத்ததாக 2-வது தடுப்பூசி போட உள்ள 28 நாட்கள் வரை மது அருந்தக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் செலுத்திக் கொண்டார்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை செலுத்திக் கொண்டார்.
2. கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி
இலங்கையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட உள்ளது.
3. நாடு முழுவதும் 20.39 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை
நாடு முழுவதும் இதுவரை 20.39- லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா
மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .
5. இந்தியாவில் 16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியாவில் இதுவரை 16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.