விழுப்புரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை


விழுப்புரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 12 Jan 2021 4:47 AM GMT (Updated: 12 Jan 2021 4:47 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரம்,

நாட்டின் 72-வது குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் குடியரசு தின விழாவை கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசியதாவது:-

கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் கலந்துகொள்ளும் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பொதுப்பணித்துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தை சரிசெய்ய வேண்டும். நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள், அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதிகளை ஏற்படுத்தவும், சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ குழுவினரையும் ஏற்படுத்த வேண்டும்.

சிறப்பான ஏற்பாடு

மேலும் பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து அவரவர்களுக்கு வழங்கியுள்ள பணிகளை மேற்கொண்டு விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட வன அலுவலர் அபிஷேத்தோமர், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு உள்பட அனைத்துத்துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story