மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.1,000 எப்போது கிடைக்கும்? புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் + "||" + When will the Pongal prize of Rs.1,000 be available? Puduvai Chief-Minister Narayanasamy replied

பொங்கல் பரிசு ரூ.1,000 எப்போது கிடைக்கும்? புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில்

பொங்கல் பரிசு ரூ.1,000 எப்போது கிடைக்கும்? புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில்
பொங்கல் பரிசாக மக்களுக்கு அரசு வழங்க திட்டமிட்டுள்ள ரூ.1,000 எப்போது கிடைக்கும்? என்பதற்கு நாராயணசாமி பதில் அளித்தார்.
தொடர் போராட்டம்
புதுவை சட்டசபை வளாகத்தில் நேற்று 2-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்ட அமைச்சர் கந்தசாமியை முதல்-அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார். 

தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தியுள்ளோம். அப்போது கவர்னர் எந்தெந்த முறையில் கோப்புகளை தடுத்து நிறுத்துகிறார் என்பது குறித்து மக்களுக்கு விளக்கினோம். எந்தவித அதிகாரமும் இல்லாமல் மக்களை அவமதிக்கும் வகையில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து 
சர்வாதிகாரமாக நடக்கிறார்.

பொங்கல் திருநாள் தமிழர்கள் திருநாள். இதை தமிழர்கள் விமரிசையாக கொண்டாடுவார்கள். பொதுமக்களுக்கு இடையூறு தரக்கூடாது என்பதற்காக எங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டோம். பொங்கலுக்கு பின் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம்.

நிவர்த்தி செய்ய...
அமைச்சர் கந்தசாமி தனது துறைகள் தொடர்பாக நிலுவையில் உள்ள 15 கோப்புகள் தொடர்பாக சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு கோப்பு அனுப்பினால் அதை கவர்னர் மாற்றி செயல்படுகிறார்.

இந்த கோப்புகள் தொடர்பாக தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளரை அழைத்து பேச உள்ளேன். எந்தெந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளோம் என்பதை பார்த்து அதை உடனே நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட உள்ளேன்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை செலவு செய்ய கவர்னர் அனுமதிப்பதில்லை. திட்டங்களை தடுத்து நிறுத்தும் அதிகாரம் அவருக்கு இல்லை. இந்த திட்டங்களுக்கு எல்லாம் சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல் பரிசு
இதன்பின் நாராயணசாமியிடம் பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்ட தொகை எப்போது கிடைக்கும்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, இதுதொடர்பாக நிதித்துறை செயலாளரை அழைத்து பேச உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரவாயலில் பரிதாபம்; பொங்கல் பரிசு பணத்தை செலவு செய்த கல்லூரி மாணவர் தற்கொலை
பொங்கல் பரிசு பணத்தை செலவு செய்ததால் தாயார் திட்டுவார்களோ என்று பயந்து, வீட்டின் பூஜை அறையில் உள்ள உறை கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
2. பொங்கல் பரிசு, ரொக்கத்தொகை வினியோகம் 25-ந் தேதிவரை நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
பொங்கல் பரிசு, ரொக்கத்தொகையை அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் பெறாமல் விடுபடுவதைத் தவிர்க்க, அவற்றை வினியோகம் செய்யும் கால அவகாசத்தை 25-ந் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3. பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கும் திட்டம்: எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
1 கோடியே 80 லட்சம் எண்ணிக்கையில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும், ரூ.2,500 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
4. பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கும் திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கும் திட்டத்தை இன்று மாலை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
5. பொங்கல் பரிசு ஆரம்பகட்ட அறிவிப்புதான்; இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
பொங்கல் பரிசு ஆரம்ப கட்ட அறிவிப்புதான், இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்க உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.