மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர் + "||" + In Kallakurichi, members of the alternative party joined the AIADMK

கள்ளக்குறிச்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

கள்ளக்குறிச்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. முன்னிலையில் கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த வரதப்பனூர், மலைக்கோட்டாலம், பெரியசிறுவத்தூர், மேலூர், காட்டனந்தல், சிறுமங்கலம், பெருமங்கலம், நீலமங்கலம், புக்கிரவாரி, மேலூர், காட்டனந்தல், நீலமங்கலம், பெருவங்கூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து தி.மு.க. உள்பட மாற்று கட்சிகளை சேர்ந்த 500 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.


நிகழ்ச்சியில் பிரபு எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், சின்னசேலம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் பச்சையாபிள்ளை, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் செந்தில்குமார், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்கபாண்டியன், வக்கீல் பிரிவு பொருளாளர் வெற்றி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வரதன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் மணி, நீலமங்கலம் ராஜீவ்காந்தி உள்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார்? - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்
அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார்? என்பதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ - கே.டி.ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது.