திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகளுக்கு சிறப்பு ஆணை மூலம் மணிமுத்தாறு தண்ணீர் வழங்க வேண்டும்; கலெக்டரிடம், இன்பதுரை எம்.எல்.ஏ. கோரிக்கை


நெல்லை மாவட்ட கலெக்டரிடம், இன்பதுரை எம்.எல்.ஏ. கோரிக்கை
x
நெல்லை மாவட்ட கலெக்டரிடம், இன்பதுரை எம்.எல்.ஏ. கோரிக்கை
தினத்தந்தி 12 Jan 2021 5:27 AM GMT (Updated: 12 Jan 2021 5:27 AM GMT)

ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

ராதாபுரம் ெதாகுதிக்கு உட்பட்ட திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் குளங்கள் நிரம்பாத நிலையில் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

தற்போது மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் திசையன்விளை, ஆயன்குளம், இடையன்குடி, ஆனைக்குடி, நவ்வலடி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் அரசிடம் இருந்து ஒரு சிறப்பு ஆணை பெற்று அணையில் இருந்து தண்ணீர் வழங்க அறிவிப்பு வெளியிட வேண்டும். இதன்மூலம் அந்த பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் கோடை காலத்தில் திசையன்விளை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் விஷ்ணு, இதுகுறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Next Story