மாவட்ட செய்திகள்

கடலூர் வண்டிப்பாளையத்தில் 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை கணவர், மாமியார் கைது + "||" + Husband, mother-in-law arrested for hanging 8-month-pregnant woman at Cuddalore bus stand

கடலூர் வண்டிப்பாளையத்தில் 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை கணவர், மாமியார் கைது

கடலூர் வண்டிப்பாளையத்தில் 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை கணவர், மாமியார் கைது
கடலூர் வண்டிப்பாளையத்தில் 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் முதுநகர்,

கடலூர் வண்டிப்பாளையம் குழந்தை காலனி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன்(வயது 55). இவரது மகன் கோகுல்(வயது 24). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும், திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் மகள் ஜோதிகா(22) என்பவரும் காதலித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். 8 மாத கர்ப்பிணியான ஜோதிகா, நேற்று அதிகாலை துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


ஆ.டி.ஓ. விசாரணை

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து சென்று ஜோதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ஜோதிகாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல், ஜோதிகாவின் மாமியார் சாந்தி(45) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும். திருமணமான ஓராண்டில் ஜோதியாக இறந்துள்ளதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி, விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன திருட்டு; வாலிபர் கைது
ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன முறையில் திருடப்பட்டது.
2. நூதன முறையில் 3.46 கிலோ தங்கம் கடத்தல்; துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேர் கைது
துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேரிடம் இருந்து ரூ.1.75 கோடி மதிப்பிலான 3.46 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.
3. மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி உரிமையாளர் காருடன் மாயமான கடை ஊழியர் கைது
கோபி அருகே மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி கடை உரிமையாளர் காருடன் மாயமான ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
4. காஞ்சீபுரத்தில் திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை; கணவர் கைது
திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.
5. பல்லடம் அருகே குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது; 400 கிலோ குட்கா பறிமுதல்
பல்லடம் அருகே அம்மாபாளையத்தில் குட்கா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.