மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் ஒன்றியக்குழு தலைவருடன் கவுன்சிலர்கள் வாக்குவாதம் கடலூரில் பரபரப்பு + "||" + Councilors' argument with Union Committee chairman over non-provision of basic facilities has caused a stir in Cuddalore

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் ஒன்றியக்குழு தலைவருடன் கவுன்சிலர்கள் வாக்குவாதம் கடலூரில் பரபரப்பு

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் ஒன்றியக்குழு தலைவருடன் கவுன்சிலர்கள் வாக்குவாதம் கடலூரில் பரபரப்பு
கடலூரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்று கூறி ஒன்றியக்குழு தலைவருடன், கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,

கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் அய்யனார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார ஊராட்சி) கிருஷ்ணமூர்த்தி, (கிராம ஊராட்சி) சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதுபற்றிய விவரம் வருமாறு:-


கவுன்சிலர் ஞானசவுந்தரி கூறுகையில், சேடப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகரைக்காட்டில் சமுதாய நலக்கூடம் அமைத்து தரவேண்டும். சிப்காட்-2 பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார்.

வாக்குவாதம்

கவுன்சிலர் தமிழழகி கூறுகையில், கோண்டூர் வெளிச்செம்மண்டலத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும். ராகவேந்திராநகர், வெங்கடாஜலபதி நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும். இந்திராநகர், செல்வகணபதி நகரில் உள்ள குட்டைகளை உடனே தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது மற்ற கவுன்சிலர்களும், தங்கள் பகுதியில் இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என்று கூறி, ஒன்றியக்குழு தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திகேயன், மதிவாணன், கிரிஜா செந்தில்குமார், வேல்முருகன், மகேஸ்வரி விஜயராயலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இளையமதுகூடம் பகுதியில் பழுதான தொகுப்பு வீடுகளை இடித்து அகற்ற வேண்டும் சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
இளையமதுகூடம் பகுதியில் பழுதான தொகுப்பு வீடுகளை இடித்து அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
2. தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
மேலக்கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோவில் முன்பு தி.மு.க. மாநில வர்த்தகர் அணி சார்பில் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது.
3. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள அரசு அவிழ்க்கும்
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய உள்ள அரசு அவிழ்க்கும் என்று மக்கள் கிராமசபை கூட்டத்தில் தயாநிதிமாறன் எம்.பி. கூறினார்.
4. குமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
குமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.
5. வருகிற சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டி கடலூரில் ஜவாஹிருல்லா அறிவிப்பு
வருகிற சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று கடலூரில் அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.