மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை முத்துக்கடையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் - 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு + "||" + Ranipettai Muthukadaiyil A.D.M.K. Demonstration on behalf of - Participation of 2 MLAs

ராணிப்பேட்டை முத்துக்கடையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் - 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

ராணிப்பேட்டை முத்துக்கடையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் - 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
ராணிப்பேட்டை முத்துக்கடையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை முத்துக்கடையில் அ.தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முகமது ஜான் எம்.பி., சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி. சந்தோசம் வரவேற்றார்.

பெண்களையும், அ.தி.மு.க. தலைவர்களையும் அவதூறாக பேசியதாக கூறப்படும் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுபபினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஏழுமலை, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் முரளி, மாவட்ட பொருளாளர் ஷாபுதின், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட மகளிரணி செயலாளர் ராதிகா, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பெல் தமிழரசன், பெல் கார்த்திகேயன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, நிர்வாகிகளும், அணிகளின் நிர்வாகிகளும், கலந்து கொண்டனர்.