மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விபத்து - காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் + "||" + Near Vaniyambadi, Car crash accident on a motorcycle - The minister who rescued the injured and sent them to the hospital

வாணியம்பாடி அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விபத்து - காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்

வாணியம்பாடி அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விபத்து - காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்
வாணியம்பாடி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அனுப்பி வைத்தார்.
வாணியம்பாடி,

நாட்டறம்பள்ளி அருகே உள்ள கே.பந்தரபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70), விவசாயி. இவர் தனது மனைவி தனலட்சுமியை (65) அழைத்துக்கொண்டு, வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்தார்.

சிகிச்சை முடிந்து நேற்று மதியம் நாட்டறம்பள்ளியை நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புத்துக்கோவில் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக பின்னால் சென்னையில் இருந்து பெங்களூருவை நோக்கி வந்த ஒரு கார் திடீரென அவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் அவரும், மனைவியும் படுகாயம் அடைந்தனர்.

அந்த நேரத்தில் வாணியம்பாடியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நாட்டறம்பள்ளியை நோக்கி சென்ற அமைச்சர் கே.சி.வீரமணி சென்று கொண்டிருந்தார். விபத்து நிகழ்ந்ததை பார்த்த அமைச்சர் கே.சி.வீரமணி தனது காரை நிறுத்தி கீழே இறங்கினார். பின்னர் ஆம்புலன்சை வரவழைத்து காயம் அடைந்த தம்பதியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

விபத்து குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கிரண் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜோலார்பேட்டை அருகே, மூக்கனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா- அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்
ஜோலார்பேட்டை அருகே மூக்கனூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். காளைகள் முட்டி 45 பேர் காயம் அடைந்தனர்.
2. வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே 3 அடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகள் நிறைவு - அமைச்சர் கே.சி. வீரமணி ஆய்வு
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே நிறைவடைந்த 3 அடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகளை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று ஆய்வு செய்தார்.
3. குடியாத்தத்தில் 738 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியில் நலத்திட்ட உதவி; அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
குடியாத்தத்தில் ரூ.5½ கோடியில் புதிய கட்டிடங்களுக்கு பூமிபூஜை செய்து, 738 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
4. திருப்பத்தூர் சின்னராஜ் நாயுடு சூப்பர் மார்க்கெட், நாட்டு மருந்துக்கடை திறப்பு விழா - அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு
திருப்பத்தூர் சின்னராஜ் நாயுடு சூப்பர் மார்க்கெட் மற்றும் நாட்டு மருந்துக்கடை திறப்பு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
5. ஆலங்காயம் ஒன்றிய புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி: அ.தி.மு.க.வே இருக்காது என்றவர்கள் காணாமல் போய் விட்டனர் - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
அ.தி.மு.க. கட்சியே இருக்காது என்றவர்கள் காணாமல் போய் விட்டார்கள் என அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை