மாவட்ட செய்திகள்

முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கண்ணன் தகவல் + "||" + Spinal cord affected transplant recipients Apply for Special Vehicles - Collector Kannan Information

முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கண்ணன் தகவல்

முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கண்ணன் தகவல்
நடப்பு நிதியாண்டில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சிறப்பு வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர்,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடப்பு நிதியாண்டில் கால்களில் முழுமையாக வலுவில்லாத, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இதனை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

கால்களில் முழுமையாக வலுஇல்லாத முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பப் படிவத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ வருகிற 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடைய வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பட்டியலின பஞ்சாயத்து தலைவருக்கு அவமதிப்பா? விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை - கலெக்டர் கண்ணன் தகவல்
விருதுநகர் அருகே குருமூர்த்திநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்தில் பட்டியலின பஞ்சாயத்து தலைவருக்கு அவமதிப்பு நேர்ந்ததாக கூறப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
2. தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விருதுநகர் மாவட்டத்தில் இருந்து செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - கலெக்டர் கண்ணன் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜைக்கு செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் கண்ணன் ஆலோசனை வழங்கினார்.
3. ஆதார் அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே உரம் வினியோகம் செய்ய வேண்டும் - கலெக்டர் கண்ணன் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே உரக்கடைகளில் உரம் வினியோகம் செய்ய வேண்டும் என கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4. அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு அலுவலர் நியமிக்க நடவடிக்கை - கலெக்டர் கண்ணன் தகவல்
முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளபடி அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு அலுவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.
5. பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க கலெக்டர் தலைமையில் கூட்டம் - தமிழக அரசு உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு அமைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர்மற்றும் வேலைவாய்ப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் நஜிமுதீன் விடுத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-