காஞ்சீபுரம் அருகே பட்டாகத்தியால் சமையல்காரர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை,
காஞ்சீபுரத்தை அடுத்த களக்காட்டூர் காந்தி ரோட்டை சேர்ந்தவர் அருள். இவரது மகன் லிங்கமூர்த்தி (வயது 32). சமையல்காரராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் இவர் களக்காடூரில் உள்ள அரசு தோட்டக்கலை எதிரே நேற்று முன்தினம் இரவு நின்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை பட்டாகத்தியால் சரமாரியாக வெட்டினர்.
சாவு
அவரது அலறல் சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லிங்கமூர்த்தியை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர், பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.
இது குறித்து மேலும் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலை முன் விரோதத்தில் நடந்ததா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட கோவையில் இருந்து ஆலங்காயம் அருகே சொந்த ஊருக்கு வந்த டைல்ஸ் கற்கள் பதிக்கும் தொழிலாளியை மர்மநபர்கள் வெட்டிக்கொன்று, உடலை கோணிப்பையில் கட்டி விவசாயக் கிணற்றில் வீசினர்.
சேலத்தில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 15 பேர் நாமக்கல், கரூர் கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.