மாவட்ட செய்திகள்

ரேசன் கார்டுதாரர்களுக்கு ஏப்ரல் முதல் ஊட்டச்சத்து பொருட்கள் வினியோகம் மந்திரி கோபாலய்யா தகவல் + "||" + Gopalaiah, Minister for Distribution of Nutrition Products to Ration Cardholders from April

ரேசன் கார்டுதாரர்களுக்கு ஏப்ரல் முதல் ஊட்டச்சத்து பொருட்கள் வினியோகம் மந்திரி கோபாலய்யா தகவல்

ரேசன் கார்டுதாரர்களுக்கு ஏப்ரல் முதல் ஊட்டச்சத்து பொருட்கள் வினியோகம் மந்திரி கோபாலய்யா தகவல்
பாகல்கோட்டை உள்பட 4 மாவட்டங்களில் ரேசன் கார்டுதாரர்களுக்கு ஏப்ரல் முதல் ஊட்டசத்து பொருட்கள் வினியோகிக்கப்படும் என்று மந்திரி கோபாலய்யா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, 

கர்நாடக உணவு மற்றும் பொது வினியோகத் துறை மந்திரி கோபாலய்யா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பாகல்கோட்டை, கலபுரகி, விஜயாப்புரா உள்பட 4 மாவட்ட மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பெண்கள், சிறுவர்கள் அவதிப்படுகின்றனர். 4 மாவட்டங்களை சேர்ந்த சிறுவர்களுக்கு அங்கனவாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து அடங்கிய உணவு பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து பெண்கள் மற்றும் ஆண்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் நலன் கருதி ஏப்ரல் மாதம் முதல் 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க அரிசி வினியோகிக்கப்பட உள்ளது.

ஏப்ரல் முதல் அமல்

ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள மாநிலங்களில் ஊட்டச்சத்து உள்ள அரிசி உள்பட ஊட்டச்சத்து உணவு பொருட்களை வினியோகிக்க மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில் ஊட்டசத்து பொருட்களை வினியோகிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இதற்காக மத்திய அரசு 2019-ம் ஆண்டு ரூ.1,746 கோடி ஒதுக்கீடு செய்தது.

இந்த திட்டத்தின் கீழ் ரேசன் கார்டுதாரர்களுக்கு ஊட்டச்சத்து, வைட்டமின்,இரும்பு சத்து மிக்க அரிசியுடன், சிறுதானியத்தில் தயாரிக்கப்படும் மாவு வினியோகிக்கப்படும். இவற்றுடன், கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை ஆகியவற்றில் தயாரிக்கப்படும் மாவு வினியோகிக்கப்படும். இந்த திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. தியாகராயநகர், மயிலாப்பூர் பகுதிகளில் விரைவில் பணிகள் தொடங்க திட்டம் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்
தியாகராயநகர், கோடம்பாக்கம், மயிலாப்பூர் பகுதிகளில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
2. இந்திய கொரோனா தடுப்பூசிகள் 24 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன: நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகள் இதுவரை 24 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
3. அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் லோக் ஆயுக்தா விசாரணைக்கு பரிந்துரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தெரு விளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரை, லோக் ஆயுக்தா விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் கூறினார்.
4. முன்கள பணியாளர்களை போல தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும் கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
‘முன்கள பணியாளர்களை போல தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்’, என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
5. வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் அதிகாரிகள் தகவல்
நாளை முதல் அபராதம்: வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் அதிகாரிகள் தகவல்.

அதிகம் வாசிக்கப்பட்டவை