நெல்லையில் சாலை விரிவாக்க பணிக்காக கடை, வீடுகளை அகற்ற நோட்டீஸ் நெடுஞ்சாலை துறையினர் அனுப்பினர்


நெல்லையில் சாலை விரிவாக்க பணிக்காக கடை, வீடுகளை அகற்ற நோட்டீஸ் நெடுஞ்சாலை துறையினர் அனுப்பினர்
x
தினத்தந்தி 13 Jan 2021 4:30 AM GMT (Updated: 13 Jan 2021 4:30 AM GMT)

நெல்லையில் சாலை விரிவாக்க பணிக்காக கடைகள், வீடுகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.

நெல்லை, 

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. பாலத்தின் தொடக்கத்தில் உள்ள இணை சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு பாதசாரிகள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதனிடையே பாலத்தின் ஒரு பகுதியான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டிய இடங்களில் கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.

நோட்டீஸ்

எனவே அவற்றை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று கடைகள், வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி பொறியாளர் வேலாயுதம், சாலை ஆய்வாளர்கள் முனுசாமி, ரிபாய், நெல்லை சந்திப்பு கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி, நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் ஆகியோர் ேநரடியாக சென்று நோட்டீஸ் வழங்கினர்.

பூட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகளில் நோட்டீசை ஒட்டினர். நோட்டீஸ் ஒட்டப்பட்ட சில நாட்களுக்குள் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு பகுதியில் ெமாத்தம் 30 வீடுகள் மற்றும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

Next Story