தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நெல்லை மேலநத்தம் பாலத்தில் போக்குவரத்து துண்டிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு + "||" + Tamiraparani river flood: Traffic cut off at Nellai Melanatham bridge
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நெல்லை மேலநத்தம் பாலத்தில் போக்குவரத்து துண்டிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு
நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மேலநத்தம் ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணையில் இருந்தும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் ெநல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.
போக்குவரத்து துண்டிப்பு
இதனால் நெல்லை மேலநத்தம் ஆற்றுப்பாலத்தை தொட்டபடி ெவள்ளம் செல்கிறது. அதாவது நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மேலநத்தம்-கருப்பந்துறை ஆகிய ஊர்களை இணைக்கும் பாலம் அமைந்துள்ளது.
நேற்று இரவு இந்த பாலத்தின் மேல்மட்ட பகுதியை தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து போலீசார் அந்த பாலத்தின் இரண்டு பக்கத்திலும் கயிறு கட்டினார்கள். மேலும் இரும்பு தடுப்புகளை கொண்டும் தடை ஏற்படுத்தினர். பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த வழியாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் ேபாக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கும், டவுனில் இருந்து மேலப்பாளையத்திற்கும் செல்பவர்கள் மாற்றுப்பாதையில் சென்றனர்.
சீவலப்பேரி பாலம்
இதேபோல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தாழ்வான நிலையில் பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியிலும் தண்ணீர் தொட்டவாறு பெருக்கெடுத்து ஓடியது. அங்கும், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் அண்ணாவிளையாட்டு அரங்கத்தில் குடியரசு தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை பெரியகோவிலுக்கு சுற்றுலா வந்த சென்னை டாக்டர் குடும்பத்தினரிடம் 12½ பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை அருகே சாலையோரம் நின்ற காருக்குள் காண்டிராக்டர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.