மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு + "||" + Heavy rains in the Western Ghats: Flooding at Courtallam Main Falls
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ராமநதி அணை 6-வது முறையாக நிரம்பி உள்ளது.
தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே தொடர்ந்து மழை பெய்து வந்தது. சில இடங்களில் பலத்த மழையும், மற்ற இடங்களில் சாரல் மழையும் பெய்தது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மதியம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அதில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
குளிக்க தடை
பின்னர் மாலையில் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மெயின் அருவியில் தொடர்ந்து தடை நீடிக்கிறது. வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
ராமநதி அணை நிரம்பியது
கடையம் பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை 6-வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அதன்படி வினாடிக்கு 90 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அணையின் பாதுகாப்பு பணிகளை உதவி செயற்பொறியாளர் முருகேசன், பணியாளர்கள் ஜோசப் பாக்கியநாதன், துரைசிங்கம், தங்கராஜ் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
மீன்சுருட்டி, தா.பழூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், வயலில் தண்ணீரில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.