மாவட்ட செய்திகள்

குற்றாலம் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த தொழிலாளி கைது + "||" + Worker arrested for snatching chain from grandmother near Courtallam

குற்றாலம் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த தொழிலாளி கைது

குற்றாலம் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த தொழிலாளி கைது
குற்றாலம் அருகே மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை பறித்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தென்காசி, 

குற்றாலம் அருகே உள்ள வல்லம் அண்ணா தெருவைச் சேர்ந்த பரமசிவன் மனைவி பாலம்மாள் (வயது 77). இவர் கடந்த 4-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அதே ஊரில் உள்ள ஒரு பள்ளியின் பின்புறம் குப்பை போட சென்றார். அப்போது ஒரு மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வந்து பாலம்மாளின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார். அப்போது பாலம்மாள் அந்தச் சங்கிலியை பிடித்துக் கொள்ளவே சங்கிலி அறுந்து 7 கிராம் சங்கிலி பாலம்மாமாளின் கையில் சிக்கிக்கொண்டது. மீதி 9 கிராம் சங்கிலியை மர்ம நபர் கொண்டு சென்றுவிட்டார்.

தொழிலாளி கைது

இதுகுறித்து குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நேற்று காலை போலீசார் ரோந்து சென்றபோது அதே ஊரில் அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் மணிகண்டன் (வயது 41) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணிகண்டன் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து பறித்துச் சென்ற தங்கச் சங்கிலி மற்றும் இதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான மணிகண்டன் செங்கோட்டை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

அதிகாலையில் நோட்டம்

கைது செய்யப்பட்ட மணிகண்டன் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் கடந்த டிசம்பர் மாதம் ஊருக்கு வந்தவர் தினமும் பாலம்மாள் அதிகாலையில் குப்பை போட செல்வதை நோட்டமிட்டு 4-ம் தேதி நகையை பறித்துள்ளார். பின்னர் அவர் திருப்பூருக்கு சென்று விட்டார். போலீசாரின் தீவிர விசாரணையில் தற்போது பிடிபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி, விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன திருட்டு; வாலிபர் கைது
ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன முறையில் திருடப்பட்டது.
2. நூதன முறையில் 3.46 கிலோ தங்கம் கடத்தல்; துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேர் கைது
துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேரிடம் இருந்து ரூ.1.75 கோடி மதிப்பிலான 3.46 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.
3. மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி உரிமையாளர் காருடன் மாயமான கடை ஊழியர் கைது
கோபி அருகே மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி கடை உரிமையாளர் காருடன் மாயமான ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
4. காஞ்சீபுரத்தில் திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை; கணவர் கைது
திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.
5. பல்லடம் அருகே குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது; 400 கிலோ குட்கா பறிமுதல்
பல்லடம் அருகே அம்மாபாளையத்தில் குட்கா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.