கோவிலுக்குள் புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது; ஐம்பொன் சிலை மீட்பு


கோவிலுக்குள் புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது; ஐம்பொன் சிலை மீட்பு
x
தினத்தந்தி 13 Jan 2021 6:13 AM GMT (Updated: 13 Jan 2021 6:13 AM GMT)

கோவிலுக்குள் புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து ஐம்பொன் முருகன் சிலையையும் மீட்டார்கள்.

ஈரோடு, 

ஈரோடு சாஸ்திரிநகர் கல்யாணசுந்தரம் வீதியில் பிரசித்தி பெற்ற வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சிலைக்கு அருகில் சுமார் 1 அடி உயர ஐம்பொன் முருகன் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி நள்ளிரவில் கோவிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலையை மர்மநபர் திருடிச்சென்றார்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான ஐம்பொன் சிலையை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர். சிலை திருடியவரை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கைது

கோவிலுக்கு அருகில் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் சிலையை திருடியவர் ஈரோடு மோளகவுண்டம்பாளையம் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 55) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று மோளகவுண்டம்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த வெங்கடேசை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கைதான வெங்கடேஷ் ஈரோடு நாடார்மேடு பழையகள்ளிவலசு பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 3¼ பவுன் நகையை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெங்கடேசிடம் இருந்து ஐம்பொன் சிலையையும், 3¼ பவுன் நகைகளையும் போலீசார் மீட்டனர்.


Next Story