மாவட்ட செய்திகள்

ஆம்பூரில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம் + "||" + In Ambur Cleaning staff Struggle

ஆம்பூரில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

ஆம்பூரில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
ஆம்பூர் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
ஆம்பூர்,

ஆம்பூர் நகராட்சி அலுவலகம் முன்பு 200-க்கு மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்தும் பொங்கல் போனஸ் வழங்க கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்தவுடன் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர்.