மாவட்ட செய்திகள்

கொண்டகுப்பத்தில் உழவு பணியில் ஈடுபட்டபோது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி + "||" + A farmer was killed when his tractor overturned while plowing in Kondakuppam

கொண்டகுப்பத்தில் உழவு பணியில் ஈடுபட்டபோது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

கொண்டகுப்பத்தில் உழவு பணியில் ஈடுபட்டபோது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
கொண்டகுப்பத்தில் உழவு பணியில் ஈடுபட்டபோது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியானார்.
சிப்காட் (ராணிப்பேட்டை)

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் அருகே உள்ள கொண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50). விவசாயி. இவர் நேற்று முன்தினம் கொண்ட குப்பம் பகுதியில், டிராக்டரில், விவசாய நிலத்தில் உழவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் டிராக்டரை ஓட்டிய ரவி மீது, டிராக்டர் விழுந்து அமுக்கியதில் அவர் அந்த இடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி டிராக்டர் அடியிலேயே மாட்டிக்கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
திருவேங்கடம் வாகைக்குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலினார்.