வேலூர், வசந்தபுரம் ரெயில்வே கேட் பகுதியில் ரூ.2 கோடியில் நடை மேம்பாலம் - கலெக்டர் ஆய்வு


வேலூர், வசந்தபுரம் ரெயில்வே கேட் பகுதியில் ரூ.2 கோடியில் நடை மேம்பாலம் - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Jan 2021 2:17 PM GMT (Updated: 13 Jan 2021 2:17 PM GMT)

வேலூர் வசந்தபுரம் ரெயில்வே கேட் பகுதியில் ரூ.2 கோடியில் நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

வேலூர்,

இந்திய ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரெயில்வே கேட் பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக அங்கு நடை மேம்பாலம், வாகனங்கள் செல்ல மேம்பாலம் அமைக்கப்படுகிறது. அதன்படி. வேலூர் அருகே அரியூர், கஸ்பா, ஆர்.என்.பாளையம் போன்ற பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் வேலூர் வசந்தபுரம் பகுதியில் நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடை மேம்பாலம் அமைப்பது குறித்தும், அங்குள்ள கேட்டை மூடுவது குறித்தும் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.

அவருடன் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் (திட்டம்) தட்சணாமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் சங்கரன், வேலூர் தாசில்தார் ரமேஷ், ரெயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

வசந்தபுரம் ரெயில்வே கேட் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. எனவே இந்த ரெயில்வே கேட்டை மூடுவது குறித்தும், ரூ.2 கோடியில் நடை மேம்பாலம் அமைப்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

அரசின் ஒப்புதல் வரப்பெற்ற பின்னர் விரைவில் ெரயில்வே கேட் மூடப்பட்டு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். எனவே இந்த வழியாக செல்லும் வாகனங்கள் 500 மீட்டர் தொலைவில் உள்ள மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story