மாவட்ட செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Udayanidhi condemned Stalin speech ADMK women of Demonstration

உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்

உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் 7 தாலுகாக்களில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க. மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,

தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பெண்களை இழிவாக பேசிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க. மகளிரணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான கட்சி நிர்வாகிகள், பெண்கள் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி வரவேற்று பேசினார். மாவட்ட இணை செயலாளர் செல்வி திருப்பதி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுமதி, இணை செயலாளர் மங்கம்மாள், நகர செயலாளர் காளியம்மாள் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர பொருளாளர் பார்த்திபன், நிர்வாகிகள் மாதேஷ், செந்தில் வேல், அம்மா வடிவேல், அழகேசன், கந்தசாமி, மோகன், பலராமன், விஜயகுமார், நாகேந்திரன், பன்னீர்செல்வம் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் அறிவாளி நன்றி கூறினார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன் தலைமை தாங்கி பேசினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் எம்.கே.வேலுமணி, அன்பு, தங்கராஜ், தன்ராஜ், நகர செயலாளர்கள் சுப்பிரமணியன், பாபு, எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் குட்டி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ரவி, கலைவாணன், தருமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முனிராஜ், மணி, ராஜ்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் நரசிம்மன், சுசிலா உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

பாலக்கோடு நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராசன் தலைமை தாங்கினார். பாலக்கோடு நகர செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, நல்லம்பள்ளி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், நல்லம்பள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மகளிரணி நிர்வாகிகள் தமிழ்மணி, ரஞ்சிதம், மாதவி, ஜெய்சித்ரா, தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன் ஆகியோர் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினர்.

இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் பூக்கடை முனுசாமி, அரங்கநாதன், முன்னாள் தொகுதி செயலாளர் பச்சியப்பன், ஒன்றிய நிர்வாகிகள் ஜோசப், திருமால் வர்மா, முருகன், பிரேம்குமார், மூர்த்தி, சரவணன், செல்வம், கூட்டுறவு வங்கி தலைவர்கள் தர்மலிங்கம், அருவி, அங்குராஜ், அம்மாசி உள்பட கட்சியின் ஒன்றிய மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, கடத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி சேகர், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் தென்னரசு, பெரிய கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர் நன்றி கூறினார். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.