உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்தது


உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்தது
x
தினத்தந்தி 13 Jan 2021 2:31 PM GMT (Updated: 13 Jan 2021 2:31 PM GMT)

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில், தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கல்பனா தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் அமுதா, வட்ட செயலாளர்கள் அற்புதம் முனிராஜ், நீலா சந்திரையா, நாகராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்-அமைச்சரையும், பெண்களையும் இழிவாக பேசி வரும் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில், 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

இதில், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. முனிவெங்கடப்பன், முன்னாள் பால்வளத் தலைவர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தங்கமுத்து, ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி உள்பட பலர் பங்கேற்றனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஊத்தங்கரையில் அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட மகளிர் அணி பொருளாளர் நிர்மலா, மாவட்ட அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் ரேவதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சாந்தி வேங்கான், தனலட்சுமி, ராஜேஸ்வரி, சுகந்தி, ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரி, வனிதா, நகர செயலாளர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவாக பேசி வருவதாக கூறி அவரை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேகோரிக்கையை வலியுறுத்தி, கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில், ராயக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி விமலா சண்முகம் தலைமை தாங்கினார்.

ஒன்றிய கவுன்சிலர்கள் ஈஸ்வரி முருகன், அன்னபூரணி ரஜினி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கங்கம்மா, சோனியாகாந்தி, மாவட்ட பொருளாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கிருஷ்ணன், கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணி, முன்னாள் தலைவர் புருசப்பன், ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து, ஒன்றிய துணை செயலாளர் முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் மத்தூர் பஸ் நிலையம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் தேவராஜன், ஒன்றிய மகளிரணி செயலாளர் கஸ்தூரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கலர்பதி ஜெயந்தி புகழேந்தி, சிவம்பட்டி பழனியம்மாள், ராமகிருஷ்ண மதி இந்திரா ராமன், ஒன்றிய இணைச்செயலாளர் இம்தியாஸ் ஷாஜகான் உள்பட அ.தி.மு.க. மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி அவருக்கு கண்டனம் தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் சூளகிரியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சூளகிரி ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமை தாங்கினார்.

தமிழ்ச்செல்வி ராஜாராம், மஞ்சுளா பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டு, உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும், பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story