மாவட்ட செய்திகள்

‘வாட்ஸ்-அப்' மூலம் மாணவிக்கு காதல் தொல்லை கல்லூரி பேராசிரியர் கைது + "||" + College professor arrested for harassing student over ‘whats-up’

‘வாட்ஸ்-அப்' மூலம் மாணவிக்கு காதல் தொல்லை கல்லூரி பேராசிரியர் கைது

‘வாட்ஸ்-அப்' மூலம் மாணவிக்கு காதல் தொல்லை கல்லூரி பேராசிரியர் கைது
‘வாட்ஸ்-அப்' மூலம் கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, 

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் சதீஷ்குமார் (வயது 24). இவர், சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர். இவர் வேலைபார்க்கும் கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை படித்து வரும் மாணவிக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அந்த மாணவியை திருமணம் செய்துகொண்டுவிட்டதாக சதீஷ்குமார் போலியான திருமண பதிவு சான்றிதழை தயாரித்து, அதை ‘வாட்ஸ்-அப்' பில் பரவவிட்டு உள்ளார்.

பேராசிரியர் கைது

அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த அவர், வேறு யாரும் அவரை திருமணம் செய்துவிடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற விபரீத செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அசோக் நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி, விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன திருட்டு; வாலிபர் கைது
ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன முறையில் திருடப்பட்டது.
2. நூதன முறையில் 3.46 கிலோ தங்கம் கடத்தல்; துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேர் கைது
துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேரிடம் இருந்து ரூ.1.75 கோடி மதிப்பிலான 3.46 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.
3. மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி உரிமையாளர் காருடன் மாயமான கடை ஊழியர் கைது
கோபி அருகே மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி கடை உரிமையாளர் காருடன் மாயமான ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
4. காஞ்சீபுரத்தில் திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை; கணவர் கைது
திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.
5. பல்லடம் அருகே குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது; 400 கிலோ குட்கா பறிமுதல்
பல்லடம் அருகே அம்மாபாளையத்தில் குட்கா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.