சுற்றுலாத்துறை சார்பில் கீழடியில் பொங்கல் விழா கலெக்டர் பொங்கல் வைத்து சிலம்பம் சுற்றினார்


சுற்றுலாத்துறை சார்பில் கீழடியில் பொங்கல் விழா கலெக்டர் பொங்கல் வைத்து சிலம்பம் சுற்றினார்
x

கீழடியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பொங்கல் வைத்து சிலம்பம் சுற்றினார்.

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சியில் சுற்றுலாத்துறையின் மூலம் பொங்கல் விழா நடைபெற்றது.இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மனைவியுடன் கலந்துகொண்டு பொங்கல் வைத்தார்.

பின்னர், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம், மல்லர் கம்பு, வழுக்கு மரம், கோக்காலி ஆட்டம், கோலப்போட்டி மற்றும் பரதநாட்டியம் ஆகியப் போட்டிகளை தொடங்கி வைத்தார். சிலம்பம் சுற்றினார்.

பின்னார் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற காளைகளை பார்வையிட்டு மாட்டின் உரிமையாளர்களை கலெக்டர் பாராட்டினார்.

இணையதளம்

தொடர்ந்து, கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடசுப்பிரமணியம் வடிவமைத்த கீழடி அகழாய்வராச்சியின் சிறப்புகள் குறித்த புதிய இணையதளத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலார் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட சுற்றுலா அலுவலர் வெங்கடாஜலபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனார். 

Next Story