மாவட்ட செய்திகள்

மானாமதுரை பகுதியில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின + "||" + Paddy crops in Manamadurai area submerged in rain water

மானாமதுரை பகுதியில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின

மானாமதுரை பகுதியில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின
மானாமதுரை பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு உட்பட்ட சன்னதி புதுக்குளம், படக்குளம், மானாமதுரை சுற்றியுள்ள சுமார் 5000 ஏக்கர் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி முளைத்து நாற்றாக வளர்ந்துவிட்டன.

பொதுவாக மானாமதுரை அதன் சுற்றுவட்டாரா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் விவசாயிகள் வருடம் வருடம் ஒவ்வொரு ஆடி மாதத்திலும் 110 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய நெல் ரகங்களை விதைக்க தொடங்குவார்கள்.

அதேபோல் இந்த வருடமும் விதைத்தனர். பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நெற்கதிர்கள் அனைத்தும் முளைத்து நாற்றாக மாறிவிட்டன. கண்மாய்களில் இருந்த தண்ணீர் மறுகால் பாய்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள நெற் கதிர்கள் அனைத்தும் மூழ்கிவிட்டன.

கோரிக்கை

ஒரு ஏக்கருக்கு சராசரியாக ரூ.25 ஆயிரம் முதல் செலவு செய் துள்ளோம். தகுந்த நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி அமுதா கூறியதாவது:- வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்துள்ளோம். தொடர் மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன. மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் கோர சம்பவம் 130 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து
அமெரிக்காவில் கோர சம்பவம் 130 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து 6 பேர் உடல் நசுங்கி பலி.
2. மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையை தொடர நாடாளுமன்றம் ஒப்புதல்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கும் வகையில் அவர் மீதான பதவி நீக்க விசாரணையை தொடர நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
3. தூத்துக்குடியில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சாரல் மழை
தூத்துக்குடியில் நேற்று காலையில் பெய்த சாரல் மழை, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
4. 43-வது நாளாக மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சிதம்பரம் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை
43-வது நாளாக நேற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிதம்பரம் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. பழனி அருகே பலத்த மழை: தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றதால் பிணத்தை சுமந்து சென்ற கிராம மக்கள்
பழனி அருகே பலத்த மழை காரணமாக தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றதால் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி பிணத்தை சுடுகாட்டுக்கு சுமந்து சென்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை