தளியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தளியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2021 4:38 AM GMT (Updated: 14 Jan 2021 4:38 AM GMT)

வேளாண்மை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறக்கோரி தேன்கனிக்கோட்டை தாலுகா தளியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர்கலப்பையுடன் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேன்கனிக்கோட்டை,

வேளாண்மை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறக்கோரி தேன்கனிக்கோட்டை தாலுகா தளியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர்கலப்பையுடன் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையொட்டி கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லகுமார், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து கட்சியின் மாநில செயலாளர் தேன்கு அன்வர் தலைமையில் ஏர்கலப்பையுடன் ஊர்வலம் புறப்பட்டு பஸ் நிலையத்திற்கு சென்றடைந்தது. அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில செயலாளர் வீரமுனி ராஜ், இளைஞரணி தலைவர் அப்துல் ரகுமான், தளி கேசவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைத்தலைவர் சபியுல்லா, மாவட்ட பொருளாளர் மகாதேவன், வட்டார தலைவர் கேசவ ரெட்டி, இளைஞரணி நிர்வாகி இதயத்துல்லா, தேன்கனிக்கோட்டை நகர செயலாளர் கோபி, கெலமங்கலம் நகர செயலாளர் வெங்கடேஷ், செட்டிஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தளி இம்ரான் கான் தலைமையில் 200 பேர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதில் பொறுப்பாளர்கள் அஞ்செட்டி பர்கத், பேலகொண்டபள்ளி வரதராஜ், முனுசாமி ரெட்டி, மதக்கொண்டபள்ளி பியாரோஜான் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தாஸ் நன்றி கூறினார்.

Next Story