வேதாரண்யத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சத்தில் உதவி உபகரணங்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்


வேதாரண்யத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சத்தில் உதவி உபகரணங்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
x
தினத்தந்தி 14 Jan 2021 5:27 AM GMT (Updated: 14 Jan 2021 5:27 AM GMT)

வேதாரண்யத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.

வேதாரண்யம், 

வேதாரண்யத்தில் மாற்றுத்திறானாளிகள் நலத்துறை சார்பில் சமூக வலுவூட்டல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு 131 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 64 ஆயிரத்து 777 மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர செய்யவும் அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் வேலை வாய்ப்பில் 4 சதவீத இட ஓதுக்கீடு செய்து தந்தது தமிழக அரசு.

131 மாற்றுத்திறனாளிகளுக்கு

மத்திய அரசு நிறுவனமான அலிம்கோ நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 131 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 64 ஆயிரத்து 777 மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், உதவி மேலாளர் (அலிம்கோ நிறுவனம்) சாம்சன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுப்பையன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், துணைத்தலைவர் அறிவழகன், குரவப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், கூட்டுறவு சங்க தலைவர் நமச்சிவாயம், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் வெற்றிசெல்வன், ராஜு உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story