மாவட்ட செய்திகள்

பில்லூர்- திருப்பாச்சனூர் நரியாற்றின் குறுக்கே ரூ.1¼ கோடியில் தரைப்பாலம், வெள்ள பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி + "||" + Construction of ground bridge and flood protection barrier at a cost of Rs.

பில்லூர்- திருப்பாச்சனூர் நரியாற்றின் குறுக்கே ரூ.1¼ கோடியில் தரைப்பாலம், வெள்ள பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி

பில்லூர்- திருப்பாச்சனூர் நரியாற்றின் குறுக்கே ரூ.1¼ கோடியில் தரைப்பாலம், வெள்ள பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி
பில்லூர்- திருப்பாச்சனூர் நரியாற்றின் குறுக்கே ரூ.1¼ கோடியில் தரைப்பாலம், வெள்ள பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் பில்லூர்- திருப்பாச்சனூர் இடையே ஓடும் நரியாற்றின் குறுக்கே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.71 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் தரைப்பாலம் அமைத்தல், ரூ.41 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் வெள்ள பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் ரூ.7 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சாலை அமைத்தல் என ரூ.1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளது.

இதற்கான பூமி பூஜை விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர், விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் லட்சுமிப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோலியனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜயா சுரேஷ்பாபு ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு தரைப்பாலம், வெள்ள பாதுகாப்பு தடுப்புச்சுவர் மற்றும் இணைப்பு சாலை பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதில் அ.தி.மு.க. ஒன்றிய பாசறை பொருளாளர் முரளி, இலக்கிய அணி துணை செயலாளர் கார்த்தி, எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் கனகராஜ், மாணவர் அணி இணை செயலாளர் ராஜசேகர், ஒன்றிய துணை செயலாளர்கள் நாராயணன், ஆதிமுருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கண்டமானடி ராஜி, ஆனாங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுந்தர்ராஜ், கிளை செயலாளர்கள் கருணாமூர்த்தி, கணேசன், குணசேகர், இளையபெருமாள், வாசுதேவன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏரிகளை சீரமைக்கும் பணி

முன்னதாக விழுப்புரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் பிரதான் மந்திரி கணிஜ் ஷேத்ர கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வி.மருதூர் ஏரியை ரூ.10 லட்சம் மதிப்பிலும், சாலாமேடு பொன்னேரியை ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், அய்யனார் ஏரியை ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், பானாம்பட்டு ஏரியை ரூ.8 லட்சம் மதிப்பிலும் ஆக மொத்தம் 4 ஏரிகளை ரூ. 34 லட்சம் மதிப்பில் சீரமைப்பு செய்யும் பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜா, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, அ.தி.மு.க. மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் குமரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்குட்டுவன், நகர ஜெயலலிதா பேரவை தலைவர் கோல்டுசேகர், நகர அவைத்தலைவர் பால்ராஜ், நகர மாணவர் அணி செயலாளர் அன்பு, நகர பாசறை செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்
கள்ளக்குறிச்சியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை கலெக்டர் கிரண்குராலா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
2. ஜோ பைடன் பதவியேற்பு விழா; அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் விழா நடைபெறம் நிலையில் நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
3. டாஸ்மாக், ரேஷன் கடை பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி 19-ந்தேதி ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக், ரேஷன் கடை பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி வருகிற 19-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கூறினார்.
4. அரசு துறைகளில் சைபர் தாக்குதல் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து ஜோ பைடன் கவலை
அமெரிக்க அரசு துறைகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.
5. தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்க வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்கும்விதமாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.