விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கலெக்டர் அண்ணாதுரை பங்கேற்பு + "||" + Collector Annathurai participates in the Equality Pongal Festival at Villupuram Collector's Office
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கலெக்டர் அண்ணாதுரை பங்கேற்பு
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பொங்கல் விழாவின் சிறப்பு குறித்து விளக்கி பேசினார். விழாவில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பலரும் பாரம்பரிய உடையணிந்தபடி கலந்துகொண்டு புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
சர்க்கரை பொங்கல்
தொடர்ந்து, அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) ராஜலட்சுமி, மஞ்சுளா (வளர்ச்சி) , உதவி கலெக்டர் (பயிற்சி) ரூபினா மற்றும் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி விபத்து இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரியை உருவாக்கிட வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.
அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத் தின் சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.