மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + DMK workers protest against DMK in Kallakurichi

கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி,

தமிழக முதல்-அமைச்சரை அவதூறாக பேசிவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பிரபு எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் வரவேற்றார்.

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி

ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசும்போது தமிழக முதல்-அமைச்சரைப்பற்றி பேசுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை. தமிழர் திருநாளான பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. தி.மு.க. மக்கள் சபை கூட்டம் என்று பொய்யான பிரசாரம், பொய்யான வாக்குறுதிகளை கூறி வருகிறார்கள். தி.மு.க.வின் நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது. வருகின்ற சட்டமன்ற தேர்தலோடு தி.மு.க.வின் சகாப்தம் முடிந்து விடும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பச்சையாபிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன் அய்யம்பெருமாள், அய்யப்பா கிருஷ்ணமூர்த்தி, கதிர்தண்டபாணி, அருணகிரி, அரசு, தியாகதுருகம் நகர செயலாளர் ஷியாம்சுந்தர், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் செந்தில்குமார், வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பழனி, சந்தோஷ், சேகர், மணிராஜ் பழனிவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, வக்கீல் பிரிவு பொருளாளர் வெற்றி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் அய்யந்துரை மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கள்ளக்குறிச்சி நகர செயலாளர் பாபு நன்றி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூர் அருகே உள்ள தேனீர்பட்டி பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் சம்பா ஒரு போக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
2. விழுப்புரத்தில் கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. தி.மு.க.வை கண்டித்து சிதம்பரம், விருத்தாசலத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தி.மு.க.வை கண்டித்து சிதம்பரம், விருத்தாசலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 50 இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 50 இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. தளியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேளாண்மை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறக்கோரி தேன்கனிக்கோட்டை தாலுகா தளியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர்கலப்பையுடன் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.