மலைக்கோட்டை தெப்பக்குளம் நிரம்ப தொடங்கியது


மலைக்கோட்டை தெப்பக்குளம் நிரம்ப தொடங்கியது
x
மலைக்கோட்டை தெப்பக்குளம் நிரம்ப தொடங்கியது
தினத்தந்தி 14 Jan 2021 9:22 AM GMT (Updated: 14 Jan 2021 9:22 AM GMT)

மலைக்கோட்டை தெப்பக்குளம் நிரம்ப தொடங்கியது

மலைக்கோட்டை:
]
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தெப்பக்குளம் மலைக்கோட்டைக்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் நடுவில் உள்ள நீராழி மண்டபத்தில் தான் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாள் பூரம் நட்சத்திரத்தன்று தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். 

இந்த தெப்பக்குளத்திற்கு பல வருடங்களுக்கு முன்பு காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக தண்ணீர் வந்து நிரம்புவதற்கு வழிவகை செய்யப்பட்டு இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு அந்த வழிகள் தடைபடவே, தெப்பத்திருவிழா காலத்தில் மட்டும் மாநகராட்சி சார்பில் குளத்தில் நீர் நிரப்பப்பட்டு வந்தது. 

இந்தநிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்த தெப்பக்குளத்தில் அதிகளவில் தண்ணீர் வந்துள்ளது. இதனால் நீராழி மண்டபத்தில் சுவாமியை வைத்து பூஜை செய்யும் இடம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. வெகுநாட்களுக்கு பிறகு தெப்பக்குளத்தில் இந்த அளவு தண்ணீர் நிரம்பியுள்ளது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story