கே.வி.குப்பத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்


கே.வி.குப்பத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 14 Jan 2021 11:09 PM GMT (Updated: 14 Jan 2021 11:09 PM GMT)

கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூரில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கே.வி.குப்பம், 

நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செஞ்சி ஜி.லோகநாதன் கலந்துகொண்டு, கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி, சட்டை, காலண்டர் உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கினார்.இதில் ஒன்றிய செயலாளர்கள் குடியாத்தம் வி.ராமு, டி.சிவா, கே.வி.குப்பம் கே.எம்.ஐ.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் டி.கோபி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மாளியப்பட்டுபாபு, துணை செயலாளர் எஸ்.வி.கே.மோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் எல்.ஆர்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story