மாவட்ட செய்திகள்

துப்புகானப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை 15 ஏரிகளில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் + "||" + Steps should be taken to fill 15 lakes from Thuppukanapalli to Nagamangalam

துப்புகானப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை 15 ஏரிகளில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்

துப்புகானப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை 15 ஏரிகளில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
துப்புகானப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை 15 ஏரிகளில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம், முருகன் எம்.எல்.ஏ. கோரிக்கை.
கிருஷ்ணகிரி, 

வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது தொகுதிக்கு உட்பட்ட நேரலகிரி கிராமத்தில் மாரியம்மன் திருவிழா நடந்தது. அப்போது விழாவை காண வந்த பொதுமக்கள் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் மேகாஸ்ரீ என்ற சிறுமியும், முனிபாலன் என்ற முதியவரும் இறந்து விட்டனர். 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும்.

சூளகிரி ஒன்றியம் துப்புகானப்பள்ளி ஊராட்சி கனசூர் கிராமத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தூள்செட்டி ஏரிக்கு கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனது தொகுதிக்கு உட்பட்ட சானமாவு, பீர்ஜேப்பள்ளி, கொம்மேப்பள்ளி, உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே இந்த கால்வாயை பொதுமக்களின் நலன் கருதி மேலே குறிப்பிட்ட ஊராட்சிகள் வழியாக கால்வாய் அமைக்க கேட்டுக் கொள்கிறேன். துப்புகானப்பள்ளி முதல் நாகமங்கலம் வரையில் 15 ஏரிகளில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், நிர்வாகி சுந்தரேசன், விவசாய அணி நிர்வாகி முருகன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கடலூரில், ஓட்டலுக்கு சீல் வைப்பு
கடலூரில், ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.
2. நாகை மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 314 பள்ளிகள் இன்று திறப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
நாகை மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 314 பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால் பள்ளிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
3. டீ விற்பதால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம் நடவடிக்கை எடுக்க கோரி தாய்-மகள் மனு
வெடிமருந்து தொழிற்சாலைக்கு டீ விற்பதால் ஒரு குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரி தாய்-மகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
4. பாலத்துறை அருகே சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பாலத்துறை அருகே சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. இவர்களுக்கு கொடுங்கள்; மற்றவர்களுக்கும் வேண்டும்!
பொதுவாக, “நாரதர் கலகம் நன்மையில் முடியும்” என்பார்கள். அதுபோல, சில நேரங்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையேயுள்ள அரசியல் போட்டி, ஆரோக்கியமான போட்டியாக மாறி, மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை