தி.மு.க.வை கண்டித்து சிதம்பரம், விருத்தாசலத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


தி.மு.க.வை கண்டித்து சிதம்பரம், விருத்தாசலத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Jan 2021 4:13 AM GMT (Updated: 15 Jan 2021 4:13 AM GMT)

தி.மு.க.வை கண்டித்து சிதம்பரம், விருத்தாசலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

பெண்களை இழிவாக பேசி வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமை தாங்கினார்.

மாநில மகளிரணி துணை செயலாளரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான சத்யா பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் செல்வி ராமஜெயம், கே.கே.கலைமணி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மாரிமுத்து, செல்வராஜ், மாவட்ட அவை தலைவர் எம்.எஸ்.என்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன கோஷம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தி.மு.க.வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் பொருளாளர் ஜானகிராமன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமாறன், மாவட்ட நிர்வாகி டேங்க் சண்முகம், எம்.ஜி.ஆர். இளைஞரணி முருகையன், ஒன்றிய செயலாளர்கள் ராசாங்கம், அசோகன், சுந்தரமூர்த்தி, பாலகிருஷ்ணன், வாசு.முருகையன், ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, நகர செயலாளர் மாரிமுத்து, தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி, கிள்ளை தமிழரசன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேற்கு மாவட்டம்

இதேபோல் கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் தலைமை தாங்கினார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர்கள் பச்சமுத்து, பாலதண்டாயுதம், தம்பிதுரை, முனுசாமி, ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெண்களை இழிவாக பேசிவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

இதில் ஒன்றியக்குழு தலைவர்கள் செல்லத்துரை, மேனகா விஜயகுமார், மாவட்ட பேரவை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் விஜயகுமார், பாசறை செயலாளர் ரமேஷ், முன்னாள் நகர்மன்ற தலைவர் அருளழகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுந்தரராஜன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கனகசிகாமணி, கூட்டுறவு சங்கத் தலைவர் ராமு, கோவை மண்டல துணைச் செயலாளர் வழக்கறிஞர் அருண் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story